ஸ்விக்கி வாடிக்கையாளர்களே …, இனிமேல் ட்ரோன் மூலம் தான் டெலிவரி…!

Default Image

நவீனமயமாகியுள்ள உலகத்தில் இயந்திரங்களே மனிதர்களின் வேலையை  செய்யும் வகையில் காலம் மாறி வருகிறது. பல நிறுவனங்கள் உணவுகள், உடைகள், அலங்கார பொருட்கள், வீட்டு உபயோகப்பருட்கள் உள்ளிட்ட அனைத்தையுமே வீடுகளுக்கே வந்து டெலிவரி செய்து வருகிறது.

அந்த வகையில் ஆன்லைனில் உணவு விநியோகம் செய்யும் ஸ்விக்கி நிறுவனம் மளிகை பொருட்களையும் வீடுகளுக்கு டெலிவரி செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் இன்ஸ்டாமார்ட் செயல்பாட்டின் ஒரு பகுதியாக மளிகை பொருட்களை விநியோகிக்க ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

இன்னும் இந்த ட்ரோன் சேவை அதிகாரபூர்வமாக தொடங்கப்படாவிட்டாலும், இதற்கான சோதனை ஓட்டம் தற்பொழுது புதுடெல்லி, பெங்களூரு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தொடங்கப்பட்டுள்ளது.

மளிகை பொருட்களை கடையிலிருந்து ஒரு பொதுவான வாடிக்கையாளர்களின் வீட்டு வாசலுக்கே கொண்டு செல்ல இந்த ட்ரோன்கள் பயன்படுகிறது. மேலும், இதற்காக ஸ்விக்கி நிறுவனம் கருடா ஏரோஸ்போஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனர் அக்னிஷ்வர் ஜெயபிரகாஷ் அவர்கள், ஸ்விக்கியுடன் இணைந்துள்ள இந்த கூட்டணி  ட்ரோன் டெலிவரிகளில் ஒரு புதிய சகாப்தத்தின் விடியல் எனவும், ஸ்விக்கி போன்ற பிற நிறுவனங்களும் நேரத்தை மிச்சப்படுத்த இது போன்று ட்ரோன்களை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கூறியுள்ள ஸ்விக்கி நிறுவனம், 250 அமெரிக்க டாலர் மதிப்பில் கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தால் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 1,00,000 ட்ரோன்கள் 2024 ஆம் ஆண்டு இந்தியாவில் பயன்பாட்டுக்கு வரும் என கூறியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்