சென்னை: கெஜ்ரிவால் உதவியாளரால் தாக்கப்பட்டதாக கூறப்படும் ஸ்வாதி மாலிவால் இதுகுறித்து டிவீட் செய்துள்ளார்.
கடந்த மே 13ஆம் தேதி டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவரும், மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு ஆம் ஆத்மி எம்.பி ஸ்வாதி மாலிவால் வந்திருந்தார். அப்போது, அங்கிருந்த கெஜ்ரிவால் உதவியாளர் பிபவ் குமார் , ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது. அப்போது டெல்லி காவல் நிலையத்திற்கு தொலைபேசி வாயிலாக இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக ஸ்வாதி மாலிவால் தரப்பில் இருந்து எழுத்துப்பூர்வமாக புகார் இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து, தேசிய மகளிர் ஆணையம் இந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து நடடவடிக்கை மேற்கொண்டது. முதலில் டெல்லி போலீசாருக்கு மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. 3 நாளில் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
இந்நிலையில், இன்று டெல்லி காவல் நிலையத்தில் ஸ்வாதி மாலிவால் நேரில் ஆஜராகி இந்த சம்பவம் தொடர்பாக தனது தரப்பு வளக்கம் அளித்தார். அதன் பின்னர் தனது டிவிட்டர் பக்கத்தில் முதன் முறையாக இந்த சம்பவம் தொடர்பாக ஸ்வாதி மாலிவால் பதிவு செய்துள்ளார்.
இதற்கிடையில், ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக கூறி, அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. மேலும், தன்னை, பிபவ் குமார் 7,8 முறை அறைந்தார் என்றும்,எட்டி உதைத்தார் என்றும், தான் வலியால் துடித்தேன் என போலீசார் விசாரணையில் தெரிவித்ததாக கூறியும் ஓர் புகைப்படமும் இணையத்தில் வைராகி வந்தது.
இந்நிலையில் தான், ஸ்வாதி மாலிவால் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் அதில், எனக்கு நடந்தது மிகவும் மோசமானது. எனக்கு நடந்த சம்பவம் குறித்து காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறேன். கடந்த நாட்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி என்றும் பாஜகவினர் இதில் தலையிட வேண்டாம் என்றும் குறிப்பிட்டுளளார்.
இதனை தொடர்ந்து அவர் பதிவிட்டுள்ளதில், ட்வீட் செய்து. வீடியோக்களை வெளியிட்டால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று சிலர் நினைக்கிறார்கள். ஒருவரை மற்றொருவர் அடிப்பதை வீடியோ எடுப்பது யார்? வீடு மற்றும் அறையின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தாலே அனைவருக்கும் உண்மை தெரியவரும். உன்னால் எந்த எல்லைக்கு போக முடியுமோ அனைத்தையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஒரு நாள் எல்லோருடைய உண்மை முகமும் வெளிச்சத்திற்கு வரும் என பதிவிட்டுள்ளார்.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…