ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான சஞ்சய் சிங் , சுஷில் குமார் குப்தா மற்றும் நரேன் தாஸ் குப்தா ஆகிய மூன்று ராஜ்யசபா எம்.பி.க்களின் ஆறாண்டு பதவிக்காலம் இம்மாதம் முடிவடைய உள்ள நிலையில் இந்த இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் ஜனவரி 19-ம் தேதியும், பதவியில் இருப்பவர்களின் பதவிக்காலம் ஜனவரி 27-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசியல் விவகாரக் குழு, டெல்லி மகளிர் ஆணையத் தலைவரும், கட்சியின் முக்கிய பிரமுகருமான ஸ்வாதி மாலிவாலை வரவிருக்கும் ராஜ்யசபா தேர்தலுக்கு ராஜ்யசபா வேட்பாளராக நியமித்துள்ளது. அதேசமயம், சஞ்சய் சிங் மற்றும் என்.டி.குப்தா ஆகியோர் இரண்டாவது முறையாக மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்யசபா எம்பி சுஷில் குமார் குப்தா, ஹரியானா தேர்தல் அரசியலில் கவனம் செலுத்த விருப்பம் தெரிவித்துள்ளார். இதனால் ராஜ்யசபாவில் சுஷில் குமார் குப்தாவுக்கு பதிலாக ஸ்வாதி மாலிவால் நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லி கலால் கொள்கை ஊழல் வழக்கில் சஞ்சய் சிங் சிறையில் உள்ளார். அவரது தற்போதைய பதவிக்காலம் ஜனவரி 27ம் தேதியுடன் முடிவடைவதால், ராஜ்யசபாவுக்கு மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்திட டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியால் (AAP) ராஜ்யசபாவுக்கு பரிந்துரைக்கப்பட்டதையடுத்து, டெல்லி மகளிர் ஆணையத்தின் (DCW) தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது பதவியை ராஜினாமா செய்தார். சுவாதி மாலிவால் 2015 ஆம் ஆண்டு டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார். சுவாதி மாலிவால் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்துப் போராடுதல், பாலின சமத்துவத்தை ஊக்குவிப்பதற்காக பல்வேறு பிரச்சாரங்கள் போன்றவற்றில் முன்முயற்சிகளை எடுப்பதில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : இன்றைய ஐபிஎல் போட்டியில் ஷ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான்…
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…