கேரளாவில் தங்கக்கடத்தல் வழக்கில் கைதான ஸ்வப்னா, மற்றும் சந்தீப் நாயரை என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன் ஐக்கிய அரபு அமீரக தூதரகத்துக்கு வந்த பார்சலை ஆய்வு செய்தனர். அதில் சுமார் ரூ. 15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்க கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னாவை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக தேடி வந்தனர். அப்பொழுது அவர் கேரளா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் நேரடியாகவோ, மறைமுகவாகவோ இந்த தங்கக்கடத்தலில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளார்.
அதனையடுத்து, பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பெங்களுருவில் நேற்று இரவு ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயரை கைது செய்து இன்று மதியம் என்ஐஏ அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் இன்று மதியம் 3 மணிக்கு மேல் ஆஜர் படுத்துவதாகவும் தெரிவித்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட ஸ்வப்னா மற்றும் சந்தீப் நாயருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, கொச்சினில் உள்ள என்ஐஏ நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…