கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷின் ஜாமீன் மனுவை என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக தூதரகத்தின் பெயரில் வந்த பார்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சரித், சந்தீப் நாயர்மற்றும் பைசல் பேரத் ஆகியோர் மீது தீவிரவாத நிதி திரட்டல், சட்டவிரோத தடுப்பு செயல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளியாக ஸ்வப்னா சுரேஷ் சிறையில் உள்ளார். இந்நிலையில், இவர் ஜாமீன் கோரி என்.ஐ.ஏ நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, என்.ஐ.ஏ அதிகாரிகள் தரப்பில் ஸ்வப்னா சுரேஷ்க்கு எதிராக ஆதாரம் வலுவாக உள்ளது.
எனவே, அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என வாதிடப்பட்டது. இதையடுத்து, கேரள தங்க கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷிற்கு முதற்கட்ட விசாரணையில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என கூறி என்.ஐ.ஏ நீதிமன்றம் ஜாமீன் மனு நிராகரித்தது.
பஞ்சாப் : ஒரு காலத்தில் எப்படி கலக்கிக்கொண்டு இருந்தீங்க இப்போ உங்களுடைய நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்கிற கேள்வியை இளம்…
வாஷிங்டன் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக ‘ட்ரூத் சொஷியல்’ (Truth Social) சமூக ஊடக தளம் வைத்திருக்கிறார்.…
டெல்லி : 9 மாதங்களுக்கு மேலாக விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக பூமிக்கு கொண்டு…
சென்னை : கடந்த (2024) ஆண்டு ஆண்டு நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலில்…
சென்னை : இன்று காலையில் திருநெல்வேலி டவுன் பகுதியில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ஜாகீர் உசேன் மர்ம நபர்களால் வெட்டிபடுகொலை…
சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…