ஸ்வப்னா சுரேஷ் ஐ.சி.யுவிற்கு மாற்றம்.!
கேரள தங்க கடத்தல் வழக்கு குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ் இன்று திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் ஐ.சி.யுவிற்கு மாற்றப்பட்டார்.
திருச்சூர் மாவட்டம் விய்யூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஸ்வப்னா சுரேஷ் நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறியதை தொடர்ந்து, உடனடியாக அவர் திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், ஸ்வப்னா சுரேஸை ஐ.சி.யுவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஜூலை 5-ஆம் தேதி துபாயில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த பார்சலில் 30 கிலோ தங்கம் கடத்தப்பட்டது தெரியவந்தது. முக்கிய நபர்களான ஸ்வப்னா சுரேஷ், சரித் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை கைது செய்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு துறை மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷ், சரித் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரை செப்டம்பர் 9 -ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.