காதலியின் மீதுள்ள சந்தேகத்தால் அவரது போன் பாஸ்வேர்ட்டை கேட்க, காதலி தர மறுத்ததால் ஆத்திரமடைந்த காதலன் கொலை செய்துள்ளார்.
கிழக்கு டெல்லியில் உள்ள விநோத் நகர் பகுதியில் பிரம்பால் சிங் (39) என்பவருடன் திருமணம் செய்து கொள்ளாமல் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் மம்தா சர்மா(35). ஏற்கனவே பிரம்பால் சிங் திருமணம் செய்தவர் என்பதும், அவருக்கு 3 குழந்தைகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அதே போன்று மம்தாவிற்கும் 17 வயதில் மகன் உள்ளது குறிப்பிடத்தக்கது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பிரம்பால் சிங்கை சந்தித்த மம்தா, இருவரும் பிடித்து போக திருமணம் செய்து கொள்ளாமல் மம்தா தனது மகனுடன் பிரம்பாலுடன் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மம்தா சுத்தியால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்த அவரது மகன் போலீசாருக்கு தகவல் கொடுக்க, அவர்களும் வழக்குப்பதிவு செய்து பிரம்பால் சிங்கை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பிரம்பால் மம்தாவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். மம்தா பிரம்பாலுடனான உறவை கடந்த சில நாட்களாக முறித்துக் கொள்ள திட்டமிட்டிருந்ததாகவும், அவர் வேறு யாருடனோ மொபைலில் பேசுவதில் சந்தேகமடைந்த பிரம்பால் மம்தா மொபைலின் பாஸ்வேர்ட்டை கேட்க, அவர் தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரம்பால் மம்தாவை சுத்தியால் கடுமையாக தாக்கியதால் அவர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
கோவை : கலங்கல், பீடம்பள்ளி, பட்டணம், பாப்பம்பட்டி, அக்கநாயக்கன்பாளையம், பட்டணம்புதூர், பாப்பம்பட்டிப்பிரிவு, கண்ணம்பாளையம், நடுப்பாளையம் (ஒரு மண்டலம்), சின்ன குயிலி,…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கான அப்டேட் எப்போது வெளியாகும் என்று தான் அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற சில நடிகர்களின் ரசிகர்களும்…
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஐசிசி தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்து அசதியுள்ள…
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…