நாடாளுமன்ற இரு அவைகளில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர்நாளை தொடங்கவுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி நிறைவடைகிறது.
இந்நிலையில், நாளை பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில் ” நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
தேர்தலுக்காக பாஜக எந்த நிலைக்கும் செல்லலாம்… ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டு!
அனைத்து இடைநீக்கங்களும் திரும்பப் பெறப்படும். மக்களவை சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவருடன் நான் பேசியுள்ளேன், அரசாங்கத்தின் சார்பாகவும் நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். எனவே, சம்மந்தப்பட்ட சிறப்புக்குழுக்களுடன் பேசி, இடைநீக்கத்தை ரத்து செய்து, அவைக்கு வர வாய்ப்பளிக்க வேண்டும் என, இருவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம். அதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்தனர். மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் நாளை முதல் சபைக்கு வருவார்கள்” என்று அவர் கூறினார்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் குறித்து அறிக்கை வெளியிடக்கோரி போராட்டம் நடத்தியதற்காக ராஜ்யசபா மற்றும் லோக்சபா உறுப்பினர்கள் உட்பட 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 146 பேர் அமர்வின் எஞ்சிய கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…
துபாய்: நடிகர் அஜித் குமார் விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்களின் படப்பிடிப்பை முடித்துவிட்டு கார் ரேஸில் பங்கேற்க திட்டமிட்டு…
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…