எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படும்- மத்திய அமைச்சர்..!

Pralhad Joshi

நாடாளுமன்ற இரு அவைகளில்  குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர்நாளை தொடங்கவுள்ளது.  மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை மறுநாள் இடைக்கால மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த கூட்டத்தொடர் பிப்ரவரி 9 ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்நிலையில், நாளை  பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கவுள்ள நிலையில், இது தொடர்பாக விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பிறகு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில் ” நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் சஸ்பெண்ட் நடவடிக்கை ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்காக பாஜக எந்த நிலைக்கும் செல்லலாம்… ஆம் ஆத்மி கடும் குற்றச்சாட்டு!

அனைத்து இடைநீக்கங்களும் திரும்பப் பெறப்படும். மக்களவை சபாநாயகர் மற்றும் ராஜ்யசபா தலைவருடன் நான் பேசியுள்ளேன், அரசாங்கத்தின் சார்பாகவும் நான் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். எனவே, சம்மந்தப்பட்ட சிறப்புக்குழுக்களுடன் பேசி, இடைநீக்கத்தை ரத்து செய்து, அவைக்கு வர வாய்ப்பளிக்க வேண்டும் என, இருவரையும் கேட்டுக் கொண்டுள்ளோம். அதற்கு இருவரும் சம்மதம் தெரிவித்தனர். மேலும், சஸ்பெண்ட் செய்யப்பட்ட அனைத்து எம்.பி.க்களும் நாளை முதல் சபைக்கு வருவார்கள்” என்று அவர் கூறினார்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது, ​​மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு மீறல் குறித்து அறிக்கை வெளியிடக்கோரி போராட்டம் நடத்தியதற்காக ராஜ்யசபா மற்றும் லோக்சபா உறுப்பினர்கள் உட்பட 146 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 146 பேர் அமர்வின் எஞ்சிய கூட்டத்தொடரில் இடைநீக்கம் செய்யப்பட்டனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k