மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் சஸ்பெண்ட்: கோரிக்கை நிராகரிப்பு.!
நேற்று ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்கின் சஸ்பெண்ட்டை ரத்து செய்யமுடியாது என ஜகதீப் தன்கர், மற்றொரு எம்பியின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையின் நேற்றைய கூட்டத்தொடரின்போது, எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் இருக்கை வரை சென்று விவாதித்ததால் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இதையடுத்து இன்று காலை மீண்டும் தொடங்கிய மாநிலங்களவை கூட்டத்தில், மற்றொரு ஆம் ஆத்மி எம்பி ராகவ் சதா, நேற்று சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டது தொடர்பாக வாக்களிப்பு நடத்துமாறு கோரிக்கை விடுத்த நிலையில், மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் அதனை நிராகரித்தார்.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பிய அமளியின் காரணமாக இன்று நண்பகல் 12 மணிவரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்படுவதாக ஜகதீப் தன்கர் அறிவித்தார். அதேநேரத்தில் எதிர்க்கட்சிகள், அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஆலோசித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.