மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பிக்கள் உள்பட எதிர்க்கட்சி எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நிறைவேற்றம் செய்யப்பட்டது.இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுப்பட்டனர்.எதிர்கட்சியைச் சேர்ந்த எம்.பி.-க்கள் மசோதா நகலை கிழித்து, துணைத்தலைவர் ஹரிவன்சுக்கு எதிராக கோஷமிட்டனர். ஒரு சில எம்பிக்கள் நாடாளுமன்ற நடத்தை விதி புத்தகத்தை கிழித்து துணைத் தலைவரை நோக்கி வீசினர்.
இதையடுத்து, அமளில் ஈடுபட்ட எதிர்கட்சிகளை சேர்ந்த 8 எம்.பி.க்கள் ஒருவாரம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். பின் இன்று நடைபெற இருந்த மாநிலங்களவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது. வேளாண் சட்டம் தொடர்பாக மாநிலங்களவை உறுப்பினர்கள் தொடர் அமளி காரணமாகவும் ,இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அவையை விட்டு வெளியேற மறுப்பு தெரிவித்ததாலும் நாளை வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட 8 எம்.பிக்கள் உள்பட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…