நெருங்கும் தேர்தல்! பாஜகவில் இணைந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் பெண் எம்.பி..!
Preneet Kaur: மக்களவை தேர்தலுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பியும், பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரனீத் கவுர் பாஜகவில் இணைந்துள்ளார்.
Read More – மக்களவை தேர்தல்… விவசாயிகளுக்கான வாக்குறுதிகளை அள்ளி வீசிய காங்கிரஸ்..!
பஞ்சாப் மாநிலத்தின் பாட்டியாலா எம்.பியான பிரனீத் கவுர் வரும் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 இல் முதல்வர் பதவியில் இருந்து விலகிய பிறகு, அமரீந்தர் சிங் பஞ்சாப் லோக் காங்கிரஸை உருவாக்கி, அதற்கு அடுத்த ஆண்டு அதை பாஜகவுடன் இணைத்தார்.
Read More – இவர்கள் தான் புதிய தேர்தல் ஆணையர்கள்… ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடும் குற்றச்சாட்டு!
இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரியில் பாஜகவுக்கு உதவியதாகவும், கட்சி விரோத நடவடிக்கைகளுக்காகவும் பிரனீத் கவுர் காங்கிரஸில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இப்படியான சூழலில் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர்கள் வினோத் தாவ்டே, தருண் சுக் மற்றும் அக்கட்சியின் பஞ்சாப் தலைவர் சுனில் ஜாகர் ஆகியோர் முன்னிலையில் பிரனீத் கவுர் இன்று பாஜகவில் இணைந்தார்.
Read More – ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது சாத்தியம்.! குடியரசு தலைவரிடம் அறிக்கை தாக்கல்.!
பின்னர் அவர் கூறுகையில், “நான் இன்று பாஜகவில் இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். கடந்த 25 ஆண்டுகளாக மக்களவையிலும், சட்டமன்றத்திலும் பணியாற்றியுள்ளேன். அனைவரும் ஒன்றிணைந்து பிரதமர் மோடி மற்றும் அவரது கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது: என்றார்.