கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்தில் வசித்து வரக்கூடியவர் தான் மனநலம் குன்றிய 50 வயது முதியவர் ராய் டிசோசா. இவர் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சென்றதற்காக காவலர்களால் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் உயிரிழந்த டிசோசாவின் சகோதரர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது சகோதரர் டிசோசா ஊரடங்கு விதிகளை மீறியதாக காவல்துறையினர் அவரை அழைத்து சென்றதாகவும், அங்கு அவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் பின் அவரை அடித்ததால் தான் அவர் உயிரிழந்து விட்டார் எனவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் உயிரிழந்ததாக அவரது தாயாரை அழைத்து, வீட்டிற்கு எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் பதறிய அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துமனையில் டிசோசாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அடித்து கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் 8 பேர் தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய விஷயங்கள் இன்னும் சர்ச்சையில் உள்ளது. தொடர்ச்சியாக…
சென்னை : தமிழகத்தில் வரும் ஜனவரி 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக…
சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிக்கொண்ட 2-வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் டாஸ்…
சென்னை: இன்று 76-வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அரசியல் தலைவர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.…
சென்னை : வளர்ந்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் திலக் வர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற…
சென்னை : விஜயின் கடைசி திரைப்படமான அவருடைய 69-வது படத்தினை இயக்குனர் எச்.வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடித்து முடித்த…