ஊரடங்கை மீறியதற்காக மனநலம் பாதித்தவரை அடித்து கொன்ற காவலர்கள் 8 பேர் சஸ்பெண்ட்!

Default Image
  • கர்நாடகத்தில் ராய் டிசோசா என்னும் 50 வயது மனநல பாதிக்கப்பட்ட முதியவர் காவலர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
  • இது தொடர்பாக 8 காவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கொடகு மாவட்டத்தில் வசித்து வரக்கூடியவர் தான் மனநலம் குன்றிய 50 வயது முதியவர் ராய் டிசோசா. இவர் ஊரடங்கு விதிகளை மீறி வெளியில் சென்றதற்காக காவலர்களால் நேற்று அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இந் நிலையில் உயிரிழந்த டிசோசாவின் சகோதரர் இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் தனது சகோதரர் டிசோசா ஊரடங்கு விதிகளை மீறியதாக காவல்துறையினர் அவரை அழைத்து சென்றதாகவும், அங்கு அவரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் பின் அவரை அடித்ததால் தான் அவர் உயிரிழந்து விட்டார் எனவும் கூறியுள்ளார்.

மேலும் அவர் உயிரிழந்ததாக அவரது தாயாரை அழைத்து, வீட்டிற்கு எடுத்து  செல்லுமாறு கூறியுள்ளனர். இதனால் பதறிய அவரது குடும்பத்தினர் அருகிலுள்ள தனியார் மருத்துமனையில் டிசோசாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால், அங்கு அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததாகவும் ந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அடித்து கொன்ற சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் 8 பேர் தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்