காங்கிரஸ் ஆட்சியில் முத்தலாக் ரத்து…. சுஸ்மித்தா தேவ் உறுதி…!!
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் அனைத்து அரசியல் கட்சிகளும் பாராளுமன்ற தேர்தல் பிரச்சார பரப்புரை என தொடர்ந்து அரசியல் நடவடிக்கையை தீவிர படுத்தி வருகின்றனர்.கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகின்றது.
இதையடுத்து , டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு மாநாடு நடைபெற்று வருகின்றது.இதில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி , காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவி சுஸ்மித்தா தேவ் உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் சுஸ்மித்தா தேவ் பேசுகையில் , மோடி அரசு கொண்டுவந்த முத்தலாக் சட்ட மசோதாவை எதிர்த்து மக்களவையில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றது , முத்தலாக் சட்ட மசோதாவை எதிர்த்து கையெழுத்து இயக்கம் போராட்டம் நடைபெற்று வருகின்றது . மேலும் அவர் கூறுகையில் , முஸ்லீம் ஆண்களை சிறையில் தள்ள வேண்டுமென்று மோடி அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளது.காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரும் போது முத்தலாக் சட்டத்தை ரத்து செய்வோம் என்றும் அவர் தெரிவித்தார்.