கடந்த 14 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.மேலும், பலர் படுகாயமடைந்தனர்.தீவிரவாத தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசு மட்டும் மவுனம் சாதித்து வந்தது.
இந்நிலையில் எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே செயல்பட்டு வந்த பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை அழித்தது இந்திய விமானப்படை .1000 கிலோ வெடிகுண்டுகளை தீவிரவாத முகாம்கள் மீது வீசியதாக இந்திய விமானப்படை தெரிவித்தது .அதிகாலை 3.30 மணிக்கு இந்த அதிரடி தாக்குதலை இந்திய விமானப்படை நடத்தியதாக தெரிவித்தது.இந்திய விமான படைக்கு சொந்தமான மிராஜ் 2000 ரக போர் விமானம் மூலம் இந்த தாக்குதல் நடைபெற்றது.பகுதிகளில் இருந்த தீவிரவாதிகள் 3 முகாம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.மேலும் விமானப்படையின் தாக்குதலில் தீவிரவாத தலைவர் மசூத் அசாரின் உறவினர் கொல்லப்பட்டார். ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.பாலகோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மிகப்பெரிய முகாமை இந்தியா அழித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் மாலை அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்ட விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகளுக்கு சுஷ்மா விளக்க உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்தியா முழுவதும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள்,சினிமா துறையினர் ,விளையாட்டு துறையினர் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்திய தாக்குதலினால் சேதங்கள் இல்லை என்று சில புகைப்படங்களை மட்டும் பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…