ஷோவிக் சக்ரபர்த்தி மற்றும் சாமுவேல் மிரான்டாவை செப்டம்பர் 9-ம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு மும்பை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் 24 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தற்போது இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் நடிகை ரியா சக்ரபோர்த்தியின் மொபைல் தொலைபேசியிலிருந்து அனுப்பப்பட்ட வாட்ஸ்அப் உரையாடல்களை அதிகாரிகள் ஆய்வுசெய்தபோது, அவர் போதைப்பொருள் உபயோகித்தும், அது தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், நேற்று மும்பையில் உள்ள ரியாவின் வீட்டில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ஆய்வு செய்தனர். அப்பொழுது அவர் வீட்டில் போதைப்பொருட்கள் இருந்ததும், ரியாவின் தம்பியான ஷோவிக் சக்ரபோர்த்தி, சாமுவேல் மிராண்டா, ஜைத் மற்றும் கைசன் இப்ராஹிம் ஆகியோரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து, இன்று ஷோவிக் சக்ரபோர்த்தி மற்றும் சுஷாந்தின் மேலாளர் சாமுவேல் மிராண்டா ஆகியோருக்கு மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மும்பை, எஸ்பிளான்டேவில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கில் செப்டம்பர் 9-ம் தேதி வரை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை : கோபுரம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார் என அதிகாரபூர்வத் தகவல்…
பஞ்சாப் : அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிக்கான மெகா ஏலமானது இந்த வருடம் நடைபெறவுள்ள நிலையில், பஞ்சாப் கிங்…
டெல்லி : நேற்று உச்சநீதிமன்ற தலைமை வளாகத்தில் தேசிய நீதித்துறை அருங்காட்சியகத்தை (NJMA) தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.…
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…