போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரியா சக்கரபோர்த்தி கைது செய்தனர்.
கடந்த ஜூன் மாதம் 14-ஆம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் பாந்திராவில் உள்ள வீட்டில் தூக்குக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை தற்போது சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் நடிகை ரியா சக்கரபோர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது.
இதனால், வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையில் நடிகை ரியா, அவரது சகோதரருக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நடைபெற்ற விசாரணையில் போதைப்பொருள் கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
அப்போது, சுஷாந்த் சிங் உதவியாளர் சாமுவேல் மிரண்டாவிற்கு கைது செய்யப்பட்டவர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ரியா தம்பி சோவிக் மற்றும் சாமுவேல் மிரண்டா வீடுகளில் சோதனை நடைபெற்ற பின்னர், இருவரும் கைது செய்யப்பட்டனர்.
இருவரையும் வருகின்ற 9 -ம் தேதி வரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் காலை ரியா வீட்டிற்கு சென்று நேரில் விசாரணைக்கு ஆஜராக சம்மன் வழங்கினர்.
பின்னர், மதியம் 12 மணியளவில் ரியா போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜரானார். அங்கு அவரிடம் 6 மணி விசாரணை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, ரியா மீண்டும் ஆஜராக போதைப்பொருள் தடுப்பு பிரிவு நேற்று சமன் அனுப்பியது. இதனால், ரியா சக்கரபோர்த்தி கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தற்போது ரியா சக்கரபோர்த்தி கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…