கழுத்து நெரித்து கொல்லப்பட்டாரா பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்.? அடுத்தடுத்த அதிர்ச்சி தகவல்கள்…

Default Image

சுஷாந்த் சிங் ராஜ்புட் கழுத்தில் காயங்கள் இருந்ததாகவும், அது தூக்கில் தொங்கியது போல இல்லை எனவும். கழுத்து நெரித்து இருந்தது போல இருந்ததாகவும் மருத்துவமனை ஊழியர் ரூப்குமார் ஷா  கூறினார்.

தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட பாலிவுட் நடிகர் சுஷாந்த் ராஜ்புட் மரணம் தற்போது புது புது அதிர்ச்சி தகவல்கள் தினமும் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே சுஷாந்த் சிங் ராஜ்புட் உடலை உடற்கூறாய்வு செய்த மருத்துவ குழுவில் இருந்த நபர் ரூப்குமார் ஷா கூறுகையில் அது தற்கொலை போல அல்ல கொலை போல இருக்கிறது என தனது சந்தேகங்களை எழுப்பினார்.

மேலும், அண்மையில் அவர் பிரபல செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், சுஷாந்த் சிங் ராஜ்புட் கழுத்தில் காயங்கள் இருந்ததாகவும், அது தூக்கில் தொங்கியது போல இல்லை எனவும். கழுத்து நெரித்து இருந்தது போல இருந்ததாகவும், கூறினார்.

அதனை தொடர்ந்து அவர் கூறுகையில், அவரது எலும்புகள் முறிந்தது போல காணப்பட்டதாவும் கூறினார். அடுத்து, இதனை தான் மூத்த மருத்துவர்களிடம் கூறினேன். ஆனால் அதனை அவர்களை ஏற்க மறுத்துவிட்டார். என ரூப்குமார் ஷா கூறினார்.

இந்த செய்தியை குறிப்பிட்டு, சுஷாந்த் சிங் ராஜ்புட் சகோதரி ஸ்வேதா சிங் கிர்த்தி தனது சமூக வலைதள பக்கத்தில், தனது சகோதரர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் தொடர்பான உண்மை தனமையை CBI ஆராய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்