பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14 ம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக மும்பை போலீசார் சுஷாந்த் சிங் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி உள்பட பலரிடம் விசாரணை செய்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.
இதற்கிடையில், தன் மகன் மரணத்தில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்திக்கு தொடர்பு உள்ளதாக சுஷாந்த் சிங்கின் தந்தை கிஷோர் சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில், பாட்னா போலீசாரும் விசாரணை மேற்கொண்டது. பின்னர், பாட்னா போலீசாரும் விசாரித்து வந்த நிலையில், சுஷாந்த் வழக்கை சி.பி.ஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்தது.
இதையடுத்து, பீகார் அரசு பரிந்துரையை மத்திய அரசு ஏற்று கொண்டது. இதனால், சி.பி.ஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. டெல்லியில் இருந்து வந்து மும்பையில் வந்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று முன்தினம் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக நடிகை ரியா சக்கரபோர்த்தியிடம் 10 நேரத்திற்கு மேல் மணி நேரம் விசாரணை நடத்தினர்.
ஆனால்,விசாரணை திருப்திகரமான இல்லை என கூறி மீண்டும் விசாரிக்க முடிவு செய்யப்பட்டு நேற்று மதியம் ரியா போலீஸ் பாதுகாப்புடன் சாந்தாகுருசில் உள்ள விருந்தினா் மாளிகைக்கு சென்றார். அங்கு சி.பி.ஐ. அதிகாரிகள் 7 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் வீடு திரும்பினார்.
இந்நிலையில், 3-வது நாளாக இன்றும் ரியா சக்ரபோர்த்தியிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு, விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…
ஸ்ரீநகர் : நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…
லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…
ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீர், ஆனந்த்நாக் மாவட்டத்தின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று மாலை தீவிரவாதிகள்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…