சுஷாந்த் மரண வழக்கு: “மும்பை காவல்துறை உடந்தையாக இருக்கிறார்கள்”- பாஜக எம்.பி. குற்றசாட்டு!
சுஷாந்த் மரண வழக்கில் மும்பை காவல்துறை உடந்தையாக இருப்பதாக பாஜக தலைவர் மற்றும் எம்.பி. சுப்ரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி அவரின் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் உயிரிழந்த வழக்கை தற்பொழுது சிபிஐ நடத்தி வருகிறது.
இந்த வழக்கில் மும்பை காவல்துறை உடந்தையாக இருப்பதாக, துபாயை தளமாகக் கொண்ட தொழில்முறை கொலையாளிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் பாஜக தலைவர் மற்றும் எம்.பி. சுப்ரமணிய சுவாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவரின் ட்விட்டர் பக்கத்தில், நாள் 1 (ஜூலை 9) முதல் சுஷாந்த் கொலை செய்யப்பட்டதாக தாம் குறிப்பிட்டிருந்ததாகவும், மும்பை காவல்துறையினர் இதற்கு உடந்தையாக இருப்பதால், சிபிஐ அதிகாரிகள் விசாரணை தொடங்கப்பட வேண்டும் எனவும், துபாயும் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
For day 1 (July 9) I had said Sushant was murdered, that CBI inquiry should be instituted because Mumbai Police was complicit,and that Dubai is involved. I have been vindicated Now the Bollywood Cartel remains to be identified and made as “accessory before the murder”.
— Subramanian Swamy (@Swamy39) August 26, 2020
அதுமட்டுமின்றி, தற்பொழுது இதன் பின்னே உள்ள பாலிவுட் நெட்வொர்க் அடையாளம் காணப்பட வேண்டும் எனவும், தனது கருத்து நிரூபணம் ஆகியுள்ளதாகவும் கூறினார்.