கேரளாவில் இளம் தம்பதி முதல் பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் அனைவரிடமும் ஆச்சிரியத்தில் நிகழ்த்தியுள்ளது.
கேரளா பாலக்காடு செர்புளச்சேரி சளவற பகுதியை சேர்ந்த முஹமது முஸ்தபா அவரது மனைவி முபீனா என்ற இளம்ஜோடிகளுக்கு முதல் பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளனர். கடந்த 16-ம் தேதி பெரிந்தல்மண்ணா மவுலானா மருத்துவமனையில் அறுவை கிசிச்சை மூலம் 4 குழந்தைகளை வெளியே எடுத்துள்ளனர். இதில் என்ன ஆச்சிரியம் என்றால் நான்கும் ஆண் குழந்தைகளாம்.
முபீனா கர்ப்பமாக இருந்தபோது, அவருக்கு நான்கு குழந்தைகள் இருப்பதாக ஏற்கனவே மருத்துவர் தெரிவித்திருந்தனர். முதலில் ஆச்சரியப்பட்டாலும் தொடர்ந்து மருத்துவரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றியுள்ளார்கள். இவர்கள் பல்வேறு மருத்துவமனைகளை நாடிய பிறகுதான் இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளனர். இந்த 4 குழந்தைகள் ஒவ்வொன்றும் 1,100 கிராம் முதல் 1,600 கிராம் வரை உள்ளனர்.
இந்த நான்கு குழந்தைகளும் நியோபிளேஸ் நியோனாடல் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு அயான் ஆதம், ஆஸன் ஆதம், ஐசின் ஆதம் மற்றும் அஸ்வின் ஆதம் என்று பெயரிட விரும்புவதாக இளம்தம்பதிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனை தலைமை ஆலோசகர் ஜெயச்சந்திரன் பராமரிப்பில் உள்ளனர். அவர் ஒரு மாதம் மருத்துவமனை கண்காணிப்பில் இருக்க வேண்டும் என கூறியுள்ளார். இளம்தம்பதிகள் ஒரே பிரசவத்தில் பெற்றேடுத்த 4 குழந்தைகளை கண்டு குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கேரளா : கேரளாவில் உள்ள ஒரு அங்கன்வாடியில், ஒரு குழந்தை உப்மாவிற்கு பதிலாக பிரியாணி மற்றும் சிக்கன் ஃப்ரை கேட்கும்…
சென்னை : இன்று தமிழ்நாடு மாநில சுற்றுசூழல் மற்றும் காலநிலை துறை சார்பில் நடத்தப்படும் காலநிலை மாற்ற உச்சி மாநாடு…
சென்னை : நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான இருபதுக்கு 20 போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது.…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள், சர்வதேச போட்டிகள் விளையாடும் நாட்களை தவிர்த்து இடையில் உள்ளூர் போட்டிகளான…
கோவை : மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையின் ஒரு பகுதியில் இந்து மத கடவுள் முருகன் கோயில், காசி விஸ்வநாதர்…
சென்னை : சென்னையில் நேற்று 1 சவரன் ரூ.680 குறைந்து ரூ.61,640க்கு விற்பனையான நிலையில், இன்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.…