ஆச்சர்யம்.! பெண் பூனையை ஈன்ற ஆண் பூனை.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

Default Image

திரிபுராவில் ஆண் பூனை ஒன்று பூனைக்குட்டியை ஈன்றது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரிபுராவின் கோமதி மாவட்டத்தில் அணில் பிஸ்வாஸ் என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக சாம்பல் மற்றும் வெள்ளை நிறம் கொண்ட ‘மோகி’ எனும் ஆண் பூனை ஒன்றை வளர்த்து வருகிறார். இந்த ஆண் பூனை கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் பூனைக்குட்டியை ஈன்றது.

அந்த பூனையை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான ஆர்வமுள்ள மக்கள் அனில் பிஸ்வாஸின் வீட்டிற்கு திரண்டனர். பிறகு,  பிஸ்வாஸ் சம்பவம் நடந்த உடனேயே, உள்ளூர் கால்நடை மருத்துவர்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தினார்.  இதனையடுத்து, அவர்கள் பிஸ்வாஸின் வீட்டிற்குச் சென்றனர்.

பூனையை பரிசோதித்த அங்கு வந்த கால்நடை மருத்துவர்கள், இது எப்படி சாத்தியம் என்று அதிர்ச்சியில் குழம்பினர்.  இதற்கு அவர்களும் விளக்கம் கொடுக்கவில்லை. பிறகு, இது இயற்கையின் விதியை சவால் செய்யும் சம்பவம் என அறிவியல் ஆராச்சியாளர் விளக்கம் கொடுத்துள்ளனர்.

anil biswas
anil biswas

மேலும் இது குறித்து பேசிய பிஸ்வாஸ்” ஆண் பூனை பெண் பூனைக்குட்டிக்கு தாய்ப்பால் கொடுக்கவும் முடிந்தது. கால்நடை மருத்துவர்களால் கூட இந்த நிகழ்வை விளக்க முடியவில்லை என்றுகூறினார்”. ஆண் பூனை ஒன்று பெண்  பூனைக்குட்டியை ஈன்ற இந்த ஆச்சரிய சம்பவம்  தற்போது வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்