கொரோனா தொற்று பரவலை மிஞ்சிய போலி 500 ரூபாய் நோட்டுகளின் பரவல்!

Default Image

இந்தியாவில் போலி 500 ரூபாய் நோட்டுகள் கடந்த 1 ஆண்டில் 31% அதிகரித்துள்ளது: ரிசர்வ் வங்கி அறிக்கை!

இந்தியாவில் 500 ரூபாய் நோட்டுகள் தற்போது மிகவும் பரவலாகப் புழக்கத்தில் விடப்பட்ட நோட்டுகளில் ஒன்று, மேலும் இவை ஒட்டுமொத்த தொகுதியில் நான்கில் ஒரு பங்கைக் கொண்டுள்ளன. புழக்கத்தில் உள்ள ஒட்டுமொத்த பண நோட்டுகளில் 500 ரூபாய் நோட்டுகள் 68.4% ஆகும்.

இதனையடுத்து 2016 ஆம் ஆண்டில் நரேந்திர மோடி நிர்வாகத்தின் டிமானிடைசேஷனுக்கு பிறகு போலி நோட்டுகள் இந்தியாவின் பொருளாதார அமைப்பில் ஒரு முள்ளாக இருந்து வருகிறது. நான்கு வருடங்கள் கழித்து,அதில் ‘பாதுகாப்பு அம்சங்களை’ சேர்த்தபின்னும், கள்ள நோட்டுகள் இன்னும் பதுங்கியிருப்பதாகத் தெரிகிறது.

மேலும் ஒட்டுமொத்தமாக, கடந்த ஒரு வருடத்தில் போலி நோட்டுகள் புழக்கத்தில் 29.7% குறைந்துள்ளது. இருப்பினும், அதே நேரத்தில், இந்தியாவில் போலி 500 ரூபாய் நோட்டுகளின் எண்ணிக்கை 31% அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) சமீபத்திய ஆண்டு அறிக்கை கூறுகிறது.

பிற போலி நோட்டுகளின் எண்ணிக்கையில் குறைவு காணப்பட்டாலும், ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் காவல்துறை மற்றும் பிற சட்ட அமலாக்க முகவர் கைப்பற்றிய கள்ள நோட்டுகள் இல்லை. இதனையடுத்து கண்டறியப்பட்ட மொத்த போலி நோட்டுகளில், 3.9% ரிசர்வ் வங்கியால் கண்டறியப்பட்டது, மற்ற 96.1% மற்ற வங்கிகளால் கண்டறியப்பட்டது – இதில் தனியார் வங்கிகள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் அடங்கும்.

மேலும் தேசிய குற்ற பதிவு பணியகம் (என்.சி.ஆர்.பி) படி, 2019 ஆம் ஆண்டில் பேக் இந்தியன் கரென்சி நோட்ஸ் (எஃப்.ஐ.சி.என்) கீழ்  25.3 கோடி மதிப்புள்ள 287,404 நோட்டுகள் கைப்பற்றப்பட்டன – இது முந்தைய ஆண்டை விட 11.7% அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மட்டும், கொச்சியில் போலீசார் 1.8 கோடி ரூபாய் மதிப்புள்ள போலி நோட்டுகளையும், அசாமில், 26 லட்சம் மதிப்புள்ள போலி நோட்டுகளையும் திப்ருகரில் மீட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்