சூரத்தில் தீவிபத்து! 20 மாணவர்கள் உயிரிழப்பு! பயிற்சி மைய உரிமையாளர் கைது!
குஜராத் மாநிலம் சூரத் நகரில் உள்ள சர்தானா என்ற இடத்தில் செயல்பட்டு வந்த ஒரு காம்ப்ளக்ஸில் நான்காவது மாடியில் ஒரு மாணவர் பயிற்சி மையம் செயல்பட்டு வந்தது. இந்த மையத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பதறிய மாணவர்கள் நான்காவது மாடி மற்றும் மூஒன்றாவது மாடியில் இருந்து குதித்தனர்.
இந்த தீவிபத்தினாலும் கீழே குதித்ததிலும் 20 பேர் உயிரிழந்தனர். அதிகமானோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த பயிற்சி மைய உரிமையாளர் பார்கவ் புடானி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அந்த கட்டிடத்தின் கட்டுமான நிறுவனத்தை சேர்ந்த இருவர் மீது வழக்கு பதிவு செய்யட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகிறது.
DINASUVADU