காலவரையின்றி மூடப்பட்டது..உச்சநீதிமன்றம்..வழக்கறிஞர்களுக்கு கண்டிப்பு
இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தவும், அதனை தடுக்கவும் நேற்று இரவு நள்ளிரவு முதல் 21 நாள் லாக்டவுனை பிரதமர் மோடி அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் காலவரையின்றி மூடப்பட்டது.
இது குறித்து நேற்று நள்ளிரவில் உச்சநீதிமன்றம் வெளியிட்ட அறிவிக்கையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இன்று இரவு முதல் நாடுமுழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் பிறப்பித்து உள்ளார். எனவே இன்று(25ம்தேதி) நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்யகாந்த், எல்.நாகேஸ்வரராவ், அனிருத்தா போஸ் ஆகியோர் காணொலி மூலம் 15 வழக்குகளை மட்டுமே விசாரிக்க திட்டமிட்டிருந்த நிலையில் அந்த வழக்குகளும் தற்போது பட்டியலிடப் பட்டுயிருந்தன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவால் அனைத்தும் ஒத்திவைக்கப்படுவதாகவும் , 21 நாட்களுக்குப்பின் எப்போது நீதிமன்றம் செயல்படும், அவசரமான வழக்குகள் விசாரிக்கப்படுமா என்பது குறித்து எந்த ஒரு தகவலையும் அறிக்கையில் கூறவில்லை. கடந்த 23ம் தேதி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், கொரோனா வைரஸ் பரவும் அச்சம் காரணமாக வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்துக்கு வர கூடாது. அவ்வாறு அவசரம் இல்லை முக்கியமான வழக்குகள் என்றால் காணொலி காட்சி மூலம் விசாரிக்கும் வழக்கறிஞர்கள் தங்கள் அலுவலகத்திலிருந்து வழக்கு விசாரணையை நடத்தலாம்.மேலும், வீடியோ கான்பிரஸிங் மூலம் நடக்கும் விசாரணையை யாருக்கும் பகிரக்கூடாது, அந்த வீடியோ லிங்குகளையும் யாருக்கும் பகிரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டிப்புடன் த்னது அறிக்கையில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.