உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர்களான முலாயம் சிங்கும், அகிலேசும் அரசு பங்களாக்களைக் காலி செய்யக் கால நீட்டிப்புக் கேட்டு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
முலாயம்சிங்கும் அவர் மகன் அகிலேசும் முதலமைச்சராக இருந்தபோது குடியேறிய அரசு பங்களாக்களை இன்னும் காலி செய்யவில்லை. இருவரும் அரசு பங்களாவைக் காலி செய்ய மாநில அரசிடம் 2 ஆண்டு காலக்கெடு கேட்டனர்.
இதையடுத்து அவர்கள் இருவரையும் அரசு பங்களாக்களைக் காலி செய்ய உத்தரவிடக் கோரி லோக் பிரகாரி என்கிற அரசுசாரா அமைப்பு உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தது.
அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இருவரையும் அரசு பங்களாக்களைக் காலி செய்யுமாறு மே 7ஆம் நாள் உத்தரவிட்டது. இந்நிலையில் அரசு பங்களாக்களைக் காலி செய்யக் கால நீட்டிப்பு வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் முலாயமும் அகிலேசும் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…