பெண்களை அனுமதிக்கும் விவகாரம்!!தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்!!
பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான மறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.
சமீபத்தில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது.இதற்கு எதிர்ப்பும் ஆதரவும் இருந்துவந்த நிலையில் சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பதற்கு எதிராக தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.இதையடுத்து இந்த மனு இன்று விசாரணைக்கு வருகின்றது என்று தெரிவிக்கப்பட்டது.
சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது.இதில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க தேவசம் போர்டு சம்மதம் தெரிவித்தது.உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்த நிலையில் தற்போது ஏற்றுக்கொள்வதாக தேவசம் போர்டு அறிவிப்பு வெளியிட்டது.
பின் பெண்களை அனுமதிக்கும் விவகாரம் தொடர்பான மறு சீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது உச்சநீதிமன்றம்.