ரபேல் போர் விமான ஊழல் வழக்கில் உச்ச நீதிமன்ற விசாரணை !!!!

Published by
Priya

ரபேல் ஒப்பந்தம் :

இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் இருந்த காலத்தில் ரபேல் விமானம் வாங்கும் முடிவை இந்தியா எடுத்தது.

 

இந்நிலையில்  கடந்த 2012 ஆம் ஆண்டில் பிரான்ஸிடம் இருந்து இந்தியா 126 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்தது.அப்போது 18 விமானங்கள் பறக்க தயாராகும் நிலையில் இருந்ததாகவும் மீதமுள்ள 108 விமானங்களையும் இந்தியாவில் வைத்து தயார் செய்து கொடுக்கபடும் என்று அந்த ஒப்பந்தத்தில் கூறபட்டிருந்தது.

புதிய ஒப்பந்தம்:

Image result for ரபேல்

 

ஏப்ரல் 2015ம் ஆண்டு பாரிஸிற்கு ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஃப்ரான்கோய்ஸ் ஹோலண்டேவுடன் இணைந்து புதிய ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார்.  அதில்  பறக்கும் நிலையில் தயாராக இருக்கும் 36 உயர் ரக போர் விமானங்களை பிரான்ஸில் இருந்து வாங்க முடிவு செய்யப்பட்டது.  மேலும் அந்த 36 விமானங்களும்   உடனடியாக வாங்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டார்.

மேலும் இந்த விமானத்தை ரூ.59 ஆயிரம் கோடிக்கு வாங்கப்பட்டுகின்றன. இதில், பல ஊழல்கள் நடந்துள்ளதாக காங்கிரஸ் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. மேலும் இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

உச்ச நீதிமன்ற விசாரணை:

 

உச்ச நீதிமன்றம் ரபேல் போர் விமானம் வாங்கப்பட்ட தொகை, ஒப்பந்தம்  ஆகிய அனைத்தும் சரியான முறையில் தான் இருக்கிறது என தீர்ப்பு வழங்கியது. மேலும் அது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்தது.

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணும், பாஜ முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்காவும் உச்ச நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யும்படி இந்த வழக்குகளை தொடர்ந்தார்கள்.

மறு சீராய்வு :

அதனை தொடர்ந்து சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யபட்டது .இந்த மனுக்கள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் கே.எம்.ஜோசப் அமர்வில் கடந்த 6ந் தேதி விசாரணைக்கு வந்தது.

அந்த மனுவில், இந்த விவகாரத்தில் மத்திய அரசு முற்றிலும் தவறான தகவலை அளித்துள்ளது. அதேபோல், இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பும் சரி  இல்லை. எனவே நீதிமன்றம் தனது தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்னு கூறுப்பட்டது.

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் பொய்யான தகவல்களை கொடுத்து நீதிமன்றத்தையே மத்திய அரசு தவறாக வழி நடத்தி விட்டதாகவும்,மேலும் இந்த வழக்கில் உண்மை நிலவரத்தை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை எனவும் மனுதாரர் பிரசாந்த் பூஷண் வாதம் செய்தார்.

மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரின் வாதம்:

இந்நிலையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலுடைய வாதத்தில் , இந்த வழக்கில் மனுதாரர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள்,அனைத்தும்  பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திருடி சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் அவர் வாதிடுகையில் திருடி சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை கணக்கில் கொண்டு நீதிமன்றம் விசாரணையை தொடரக் கூடாது.

மேலும் ரபேல் போர் விமானம் குறித்த  விவரங்களை பாதுகாப்பு கருதி வெளிப்படையாக வெளியிட முடியாது எனவும் கூறினார். அதனால், இந்த மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார்.

உச்சநீதிமன்றத்தின் கேள்வி:

 

நீதிபதிகளின் விசாரணையின் போது இந்திய விமானப்படைக்கு பிரான்சிடம் இருந்து 36 ரபேல் ரக விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது மக்களின் பாதுகாப்பிற்காகத்தானே அதில் மத்திய அரசு உண்மைகளை மூடிமறைக்கலாமா ?என்று கேள்வி எழுப்பியது. மனுதாரர்கள் திருடப்பட்ட ஆவணங்களை தாக்கல் செய்ததாக கூறி போபர்ஸ் வழக்கையும் ரத்து செய்துவிடலாமா? எனவும் கேள்வி எழுப்பியது.

நாட்டின் சட்டம் ஒரு ஊழல் நடைமுறையால் உடைந்து விட்டால், நீங்கள் தேசிய பாதுகாப்பின் கீழ் இருக்க முடியுமா? மேலும் திருடப்பட்ட ஆவணங்கள் இந்த் வழக்கில் சமர்ப்பிக்கபட்டு இருந்தாலும், ஆதாரங்கள் வழக்குடன் சம்பந்தப்பட்டு இருந்தால் நீதிமன்றம் அவற்றை கருத்தில் கொண்டு கண்டிப்பாக பரிசீலனை செய்யும் எனவும் நீதிபதிகள் கூறினார்கள்.

பாதுகாப்பு அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்ட ஆவணங்களை மீட்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் தான்  என்ன? போபர்ஸ் முறைகேடு தொடர்பான ஆவணங்களும் இவ்வாறுதான் திருடி தாக்கல் செய்யப்பட்டது என்றால், அந்த வழக்கையும் முடித்து விடலாமா?’’ என மத்திய அரசிடம்  நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர். மேலும் இந்த வழக்கை வரும் 14ம் தேதிக்கு  உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

 

Recent Posts

ஃபர்ஸ்டு ரஜினி., நெக்ஸ்டு விஜய்.! ராமதாஸ் பேத்தியின் ‘அலங்கு’ படத்திற்கு தீவிர புரொமோஷன்…

சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…

24 minutes ago

“இனி காதல்., பரிசுத்த காதல்”.. ரூட்டை மாற்றிய சூர்யா! ‘ரெட்ரோ’ டீசர் இதோ…

சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…

26 minutes ago

வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி!

டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…

2 hours ago

இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…

3 hours ago

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…

3 hours ago

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து.!

பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…

4 hours ago