சபரிமலை வழக்கு : பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம்
சபரிமலை ஐய்யப்பன் கோவிலுக்கு, அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்பது தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற வழக்கின் விசாரணை வருகின்ற 6- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனைத்து வயது பெண்களும் சபரிமலை கோயிலுக்குள் செல்ல அனுமதி வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பிற்கு பின் பல முறை கோவில் நடை திறக்கப்பட்டது. ஆனால் கோவிலில் பெண்கள் நுழைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து பல்வேறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அந்த சீராய்வு மனுக்கள் அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் விசாரணை நடைபெற்றது
அதன் பிறகு , அந்த சீராய்வு மனுவில் முடிவு எட்டப்படாததால், சீராய்வு மனுக்களின் மீதான விசாரணையை 9 பேர் கொண்ட நீதிபதி அமர்வுக்கு மாற்றி பரிந்துரை செய்யப்பட்டது. எனவே உச்சநீதிமன்ற நீதிபதி பாப்டே தலைமையிலான 9 பேர் கொண்ட நீதிபதி அமர்வு இன்று சீராய்வு மனுக்களை விசாரிக்கும் என்று அறிவிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து இன்று நடைபெற்ற விசாரணையில், மறுஆய்வு மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உச்சநீதிமன்றம் தலைமைநீதிபதி பாப்டே அறிவித்தார்.மேலும் மனுக்கள் மீது யார் யார் எப்போது வாதிடுவது தொடர்பான நேரம் பிப்ரவரி 6-ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.