பாபர் மசூதி வழக்கில் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அனைத்து விசாரணைகளையும் முடித்து தீர்ப்பு வழங்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதை தொடர்ந்து, அப்போது நடத்த கலவரத்தில் 2,000 -க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் பா.ஜ.க மூத்த தலைவர்களான எல்.கே.அத்வானி, அப்போது இருந்த உத்தர பிரதேச முதலமைச்சர் கல்யாண்சிங், உள்ளிட்ட 21 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் நீதிமன்றம், வழக்கு விசாரணையை முடித்து தீர்ப்பை அடுத்த ஆண்டு ஏப்ரல் இறுதிக்குள் வெளியிட வேண்டும் என உத்தரவிடப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது கொரோனா வைரசால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வழக்கின் காலக்கெடுவை நீட்டிக்க சிறப்பு நீதிமன்றம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரப்பட்டது. நேற்று இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பாபர் மசூதி வழக்கு காலக்கெடுவை நீட்டிக்க சிறப்பு நீதிமன்றம் எழுதிய கடிதம் கடந்த 6-ம் தேதி கிடைத்தது.
நீதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அனைத்து விசாரணைகளையும் முடித்து தீர்ப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…
ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…