சுற்றுசூழலை பாதிக்காத பட்டாசுகளை மட்டுமே தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. நாடு முழுவதும் பட்டாசு தயாரிப்பு, விற்பனை, வெடிக்க தடை கோரி தொடர்ந்த வழக்குகளில் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. அதாவது, பட்டாசுகளுக்கு தடை கோரி தொடர்ந்து வழக்குகளில் நீதிபதிகள் போபண்ணா, சுந்தரேஷ் அமர்வு உத்தரவிட்டது.
பேரியம் மற்றும் சரவெடி தொடர்பாக அனுமதி கோரிய மனுவை ஏற்க முடியாது என கூறி மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். தடை செய்யப்பட்ட பேரியம் வேதிப்பொருளை கொண்டு பட்டாசு தயாரிக்க அனுமதிக்க கூடாது என மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
மேலும், பட்டாசு வெடிப்பதற்கான முந்தைய கட்டுப்பாடுகள் தொடரும் எனவும் கூறியுள்ளனர். அதன்படி, பண்டிகை காலங்களில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நேரங்களில் பட்டாசு வெடிக்கலாம் என்றும் சரவெடிக்கான தடை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று, பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து, 2018ம் ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…
சென்னை : நடிகை நயன்தாரா தனுஷ் பழிவாங்குவதாக பழிவாங்குவதாக வெளிப்படையாக குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்து பெரிய அறிக்கை ஒன்றை…
சென்னை : நானும் ரவுடிதான் படத்தில் இடம்பெற்ற பாடல்களை தங்களுடைய திருமண வீடியோவில் பயன்படுத்த தனுஷ் அனுமதி கொடுக்கவில்லை என்பதாக கூறி…