எஸ்.டி எஸ்.சி வன்கொடுமை சட்டம் : சீராய்வு மனுவை விசாரிக்க 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நிர்ணயம்!
சென்றாண்டு மார்ச் மாதம் உச்சநீதிமன்றத்தில் முக்கிய தீர்ப்பு வெளியானது, அந்த தீர்ப்பில், எஸ்.சி/ எஸ்.டி பிரிவை சேர்ந்தவர்கள் மீது சாதி வாரியாக ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், குற்றம் சாட்டப்பட்டவர் உடனடியாக கைது செய்யப்படவேண்டும். அவர்களுக்கு ஜாமீனில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.
இந்த சட்டத்திற்கு அதிகமான எதிர்ப்புகள் வந்தன. அதாவது, இந்த சட்டத்தை ஒருவர் தவறாக பயன்படுத்தி இன்னொருவரை பழிவாங்கும் நோக்கில் பயன்படுத்த முடியும் என்பதால் இச்சட்டத்தை மறுசீராய்வு செய்யவேண்டும் என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ளது.
இந்த சீராய்வு மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.