ஹத்ராஸ் வழக்கு ! அலகாபாத் நீதிமன்றம் கண்காணிக்கும்- உச்சநீதிமன்றம்
ஹத்ராஸ் வழக்கு தொடர்பான விசாரணையை அலகாபாத் நீதிமன்றம் கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் கண்டனங்கள் தெரிவித்தனர்.இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்தார். அதன்படி, ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இதனிடையே உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஓன்று தொடரப்பட்டது.அந்த வழக்கில், உத்தரபிரதேசத்தில் இருந்து இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.மேலும் இந்த வழக்கை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது ,வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும், வழக்கு தொடர்பான விசாரணை அலகாபாத் நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.தேவைப்பட்டால் சிபிஐ விசாரணை முடிவடைந்தவுடன் வழக்கை டெல்லிக்கு மாற்றுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் மேலும், தற்போது இந்த வழக்கை உத்தரபிரதேசத்தில் இருந்து டெல்லிக்கு மாற்றும் அவசியம் இல்லை என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.