மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு ரத்து.., உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
கடந்த 2018-ல் மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கான 16% இட ஒதுக்கீடு வழங்க சட்டம் நிறைவேற்றம் செய்யப்பட்டது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் 50% மேல் மொத்த இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்ற 1992 ஆம் ஆண்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், மராத்தா சமூகத்தினருக்கு 50 சதவீதத்திற்கு மேல் கூடுதலாக 16% இட ஒதுக்கீடு வழங்கிய அரசாணை வெளியிட்டது.
இதைத்தொடர்ந்து, மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16% இடஒதுக்கீட்டை வழங்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில், வழக்கை விசாரித்த 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு மராத்தா சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது.
மராத்தா சமூகத்தினருக்கு அதிக இடஒதுக்கீட்டை வழங்க எந்த முகாந்திரமும் இல்லை என நீதிபதிகள் தெரிவித்தனர். 1992 ஆம் ஆண்டில் 50% மேல் இட ஒதுக்கீடு இருக்கக்கூடாது என்று வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்றி அமைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் 60 % மேல் இடஒதுக்கீடு உள்ளது. இந்த இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்பின் கீழ் வருமா என்றால் வராது. காரணம் தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள கூடுதல் இடஒதுக்கீடு இந்திய அரசியல் சாசன பாதுகாப்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025