மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்.
நீண்ட நாட்களாக குழப்பம் நிலவி வந்த மகாராஷ்டிராவில் முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா ஆகிய கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
இதில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணை இன்று ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது .இந்த விவகாரத்தில் மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு, பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அளித்த கடிதம், எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் ஆகியவற்றை இன்று தாக்கல் செய்யுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கு என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் இன்று ஆளுநரின் அழைப்பு கடிதங்கள் உள்ளிட்ட விவரங்கள் சீலிடப்பட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து இரு தரப்புகளில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.அரசு தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், 170 எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்; ஆவணங்கள் அடிப்படையிலேயே ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார் என்று வாதிட்டார்.
காங்கிரஸ் -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல்,அபிஷேக் மனு சிங்வி வாதிட்டனர்.அப்பொழுது ,கபில் சிபில் வாதிடுகையில், அவசர அவசரமாக ஆட்சியமைத்த ஃபட்னாவிஸ், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசம் கோருவதில் உள்நோக்கம் உள்ளது என்று வாதிட்டார். மேலும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதத்தில், மகாராஷ்டிராவில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை என்று தெரிவித்தார். இறுதியாக மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பான வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…