மகாராஷ்டிரா விவகாரம் : நாளை தீர்ப்பு வழங்கப்படும் – உச்சநீதிமன்றம் அறிவிப்பு

Default Image

மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பான வழக்கில்  நாளை தீர்ப்பு அளிக்கிறது உச்சநீதிமன்றம்.
நீண்ட நாட்களாக குழப்பம் நிலவி வந்த மகாராஷ்டிராவில்  முதலமைச்சராக பாஜகவின் தேவேந்திர பத்னாவிஸ் மற்றும் துணை முதலமைச்சராக தேசியவாத காங்கிரசின் அஜித் பவார் பதவியேற்றார்கள்.இவர்களுக்கு ஆளுநர் கோஷ்யாரி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இதனிடையே மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க பாஜக கூட்டணிக்கு ஆளுநர் அனுமதி அளித்த விவகாரம் தொடர்பாக  ஆளுநரின் உத்தரவை ரத்து செய்ய கோரி  தேசியவாத காங்கிரஸ் -காங்கிரஸ் -சிவசேனா  ஆகிய கட்சிகள் இணைந்து உச்சநீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்தது.இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது.
இதில் உச்சநீதிமன்றம்  இந்த வழக்கின் விசாரணை இன்று  ஒத்திவைக்கப்படுவதாக உத்தரவு பிறப்பித்தது .இந்த விவகாரத்தில்  மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு, பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.பாஜக ஆட்சி அமைக்க ஆளுநர் அளித்த கடிதம், எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதம் ஆகியவற்றை இன்று தாக்கல் செய்யுமாறு சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிற்கு என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனால் இன்று ஆளுநரின் அழைப்பு கடிதங்கள் உள்ளிட்ட விவரங்கள் சீலிடப்பட்ட உறையில் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இதனை தொடர்ந்து இரு தரப்புகளில் கடுமையான வாதங்கள் முன்வைக்கப்பட்டது.அரசு தரப்பில் வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், 170 எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்; ஆவணங்கள் அடிப்படையிலேயே ஆளுநர் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்தார் என்று வாதிட்டார்.
காங்கிரஸ் -சிவசேனா -தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல்,அபிஷேக் மனு சிங்வி வாதிட்டனர்.அப்பொழுது ,கபில் சிபில் வாதிடுகையில், அவசர அவசரமாக ஆட்சியமைத்த ஃபட்னாவிஸ், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அவகாசம் கோருவதில் உள்நோக்கம் உள்ளது என்று வாதிட்டார். மேலும் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதத்தில், மகாராஷ்டிராவில் நடந்திருப்பது ஜனநாயக படுகொலை என்று தெரிவித்தார். இறுதியாக  மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பான வழக்கில்  நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிப்பதாக  உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்