#BREAKING : நிர்பயா வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை உறுதி -உச்சநீதிமன்றம் தீர்ப்பு

Published by
Venu
  • நிர்பயா வழக்கின் குற்றவாளி அக்ஷ்குமார் சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்  செய்தார்.
  • நிர்பயா வழக்கில் குற்றவாளி அக்‌ஷய் குமாரின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

கடந்த 2012-ம் ஆண்டு  டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவி ஓடும் பேருந்தில்  6 பேர் கொண்ட  ஒரு கும்பம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்தில்  ஈடுபட்ட 6 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.பேருந்து ஓட்டுநர் ராம்சிங்,ராம்சிங்கின் சகோதரர் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் (பேருந்து உதவியாளர்) ,ஒரு சிறுவன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் நடத்திய விசாரணையில் 6 பேரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டதால் அவர்களில் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 6 பேரில் ஒருவர் சிறுவர் என்பதால் அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைக்கப்பட்டார்.பின்பு 3 ஆண்டுகள் கழித்து சீர்திருத்தப்பள்ளியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அந்த  5 பேரில் முக்கிய குற்றவாளியான ராம்சிங்  திகார் சிறையில் தற்கொலை செய்து கொண்டார்.பின்னர் இந்த வழக்கில் முகேஷ்சிங்,வினய்ஷர்மா,பவன்குப்தா,அக்சய் குமார் சிங் தாகூர் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.இந்த தண்டனை எதிர்த்து நான்கு பேரும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.ஆனால் அவர்கள் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.எனவே நான்குபேரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றனர்.இந்த வழக்கில் நால்வருக்கும் டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தூக்கு தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.

இந்த வழக்கில்  தொடர்புடைய குற்றவாளி அக்‌ஷய் குமார்சிங் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தார். அக்‌ஷய் குமார்சிங் தாக்கல் செய்த சீராய்வு மனு மீது விசாரணை டிசம்பர் 17- ஆம் தேதி நடைபெறும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதனை தொடர்ந்து நேற்று  விசாரிப்பதாக இருந்தது.இந்த வழக்கில் இருந்து தலைமை நீதிபதி பாப்டே விலகினார்.

இந்நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் அக்‌ஷய்  குமார் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.அவரது வாதத்தில்,இந்த வழக்கில் அக்‌ஷய் குமார் சிங் சிக்க வைக்கப்பட்டுள்ளார் என்று வாதிட்டார்.இறுதியாக நீதிபதிகள் , அக்‌ஷய் குமார் சிங் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவை  தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.மேலும் அக்‌ஷய் குமார் சிங்கிற்கு வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்தனர்.

 

Recent Posts

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

கடைசி வரை போராடிய டெல்லி….கடைசி நேரத்தில் த்ரில் வெற்றி பெற்ற கொல்கத்தா!

டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…

7 hours ago

சாட்ஜிபிடியை ஓரம் கட்ட ஸ்கெட்ச் போட்ட மார்க் ஜுக்கர்பெர்க்! போட்டியில் களமிறங்கிய Meta AI ஆப்!

மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…

8 hours ago

திணறி கொண்டே அதிரடி காட்டிய கொல்கத்தா…டெல்லிக்கு வைத்த பெரிய டார்கெட்?

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

9 hours ago

“200 தொகுதிகளுக்கும் மேல் வெல்வோம்” தமிழிசைக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்!

சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…

10 hours ago

என்னுடைய மனைவி தான் தூண்…பத்மபூஷன் விருது வாங்கிய அஜித் எமோஷனல்!

டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…

10 hours ago

KKRvsDC : வெற்றிப்பாதைக்கு திரும்புமா டெல்லி? டாஸ் வென்று பந்துவீச்சு தேர்வு!

டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…

11 hours ago