#Big News:69% இடஒதுக்கீடு வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு
தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் 69% இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலே தமிழகத்தில் தான் 69% இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டு வருகிறது.இந்த இட ஒதுக்கீடை எதிர்த்து தமிழகத்தை சில மாணவிகள் மற்றும் சில பொது நல மனுக்களாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
மராத்திய மாநிலத்தில் மராத்தா என்ற இடஒதுக்கீட்டுக்கு எதிராக நடக்கும் வழக்கை உச்சநீதிமன்த்தின் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டிருந்தது.எனவே இந்த 69% இடஒதுக்கீடு வழக்கை அந்த அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி விசாரிக்க வேண்டும் என்று இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் தீர்ப்பு வரும்வரை 69% இடஒதுக்கீடு வழக்கை விசாரிக்க தேவையில்லை என்று கூறி உத்தரவு பிறப்பித்துள்ளது.