பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு …!ஆன்லைன் மூலமாக பட்டசுகளை விற்க தடை…!உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
தீபாவளி பண்டிகை நவம்பர் 6-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பட்டாசு விற்பனைக்கு தடை கோரி மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த அர்ஜுன் கோபால் வழக்கு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்தார்.அவர் தாக்கல் செய்த மனுவில் பட்டாசு வெடிப்பதால சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக குற்றச்சாட்டினார்.இந்நிலையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.
இது தொடர்பாக உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது.அதிகளவிலான சத்தம் மற்றும் மாசு ஏற்படுத்தும் பட்டாசுகள் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அங்கீகாரம் இல்லாத கடைகளில் பட்டாசுகள் விற்பனை செய்யக்கூடாது. ஆன்லைன் மூலமாக பட்டசுகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.