புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியின் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வந்த வண்ணமே இருந்தது.
இதனால் கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் மத்திய உள்துறை அமைச்சகம் கொடுத்த அனுமதி ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் அதிகாரம் தொடர்பான உத்தரவுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை நீக்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
இன்று உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தது.அதில், கிரண் பேடியின் சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
சென்னை : மாவட்டத்தில் கிண்டி பகுதியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வந்த மாணவி ஒருவர் இரண்டு பேரால் பாலியல் வன்கொடுமை…
சென்னை : கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழத்தில் படித்து வரும் ஒரு மாணவனும், மாணவியும் பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டிருந்த…
சென்னை : அட்லீ இயக்கத்தில் ஒரு படம் வெளியாகிவிட்டது என்றாலே அந்த படங்கள் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறதோ அதே…
சென்னை : திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 2019 நாடாளுமன்ற தேர்தல் முதல் தற்போது வரையில் திமுக கூட்டணியில்…
ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 26-ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கனவே, இரு அணிகளும் 5 போட்டிகள் மோதிக்கொள்ளும்…
தூங்கும்போது குப்புறபடுத்து தூங்குவதால் ஏற்படும் உடல் நல பாதிப்புகள் பற்றி மருத்துவர்கள் கூறியதை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை…