சீரியல் நம்பர்கள் எங்கே.? SBIக்கு கடும் நெருக்கடி..! உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.!
Electoral Bonds : தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நிதி பெரும் நடைமுறையை உச்சநீதிமன்றம் தடை செய்தது. மேலும், இதுவரை ஸ்டேட் பேங்க் மூலம் எந்தெந்த நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் வாங்கியுள்ளன, அதன் மூலம் எந்தெந்த கட்சிகள் நிதி பெற்றுள்ளன என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்திடம் ஸ்டேட் பேங்க் சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
Read More – தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடை வாங்கிய டாப் 10 கட்சிகள்… அதிரவைத்த ரிப்போர்ட்.!
அதன்படி நேற்று முன்தினம் தேர்தல் பத்திரங்கள் குறித்த பிராமண பத்திரத்தை ஸ்டேட் பேங்க் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனை அடுத்து, தேர்தல் ஆணையத்தில் தேர்தல் பத்திர விவரங்களை ஸ்டேட் பேங்க் சீரியல் நம்பர்கள் இன்றி கொடுத்து இருந்தது.
அதன்படி, எந்தெந்த கட்சிகள் தேர்தல் நிதி அதிகம் வாங்கியது, எந்தெந்த நிறுவனங்கள் அதிக அளவில் தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது என தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதில் எதிலுமே தேர்தல் பத்திர சீரியல் நம்பர்கள் இல்லை.
Read More – கர்நாடகாவில் பரபரப்பு.!17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.? எடியூரப்பா மீது போக்சோ வழக்கு.!
இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் குறித்த வழக்கு விசாரணையில், நீதிபதி அமர்வு SBI வங்கிக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியது. எந்தெந்த நிறுவனங்கள் எந்தெந்த தேதியில் தேர்தல் பத்திரங்கள் வாங்கினார்கள் என்ற விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதில் எதிலுமே தேர்தல் பத்திர சீரியல் நம்பர்கள் இல்லை என்றும், எந்த சீரியல் நம்பர் பத்திரங்களை கொடுத்து அரசியல் கட்சிகள் நிதி வாங்கினார்கள் என்ற விவரம் இல்லை என்றும், இதுகுறித்து ஸ்டேட் பேங்க் வரும் மார்ச் 18ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More :- முகத்தில் வழிந்த ரத்தம்.. பதறிய தலைவர்கள்.. பத்திரமாக வீடு திரும்பிய மம்தா.!
மேலும், தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த தேர்தல் பத்திர ஆவணங்களின் ஒரிஜினல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அதனை உச்சநீதிமன்ற டிஜிட்டல் பதிவேட்டில் பதிவேற்றிய பின்னர் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்படும் என்றும், பின்னர் ஒரிஜினல் ஆவணங்களை வரும் மார்ச் 17ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தங்கள் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.