மத்திய பிரதேசம் சட்டப் பேரவையில் நாளை முதல்வர் கமல்நாத் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது வீடியோ பதிவு செய்யவும், வாக்கெடுப்பில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பங்கெடுக்க விரும்பினால் கர்நாடக டி.ஜி.பி மற்றும் மத்திய பிரதேசம் டி.ஜி.பி பாதுகாப்பளிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியாவை தொடர்ந்து கமல்நாத் அரசுக்கான ஆதரவை விலக்கிக் கொண்டு ராஜினாமா செய்வதாக 22 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் அறிவித்தனர். இதனால் கமல்நாத் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து கமல்நாத் அரசு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் லால்ஜி டாண்டன் உத்தரவிட்டார். ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் சபாநாயகர் சட்டசபையை கூட்டவில்லை. இந்த நிலையில் நாளை சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…