போலீஸாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சாத்தான்குள தந்தை மகன் கொலை வழக்கு விசாரணையை கேரள மாநிலத்துக்கு மாற்றக் கோரிய வழக்கில் பதில் அளிக்க சிபிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய வியாபாரிகள் இரண்டு பேரும் சாத்தான்குளம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் இருந்த நிலையில் போலீசாரால் தாக்கப்பட்டு உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு பெரும் கண்டனங்கள் வலுத்து வந்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 10 போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன் பின் சப் இன்ஸ்பெக்டர் பால்துரை விசாரணை நடைபெற்று கொண்டிருக்கும் பொழுதே கொரோனவால் உயிரிழந்த நிலையில், மற்ற 9 போலீசார் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.
உயிரிழந்த சாத்தான்குள தந்தை மகன் வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் இறுதிகட்ட விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த வழக்கை கேரள மாநிலத்துக்கு மாற்றக் கோரி குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை கேரள மாநிலத்துக்கு மாற்றக் கோரிய உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் வழக்குக்கு சிபிஐ பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2025 இன் நான்காவது போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி மைதானத்தில் டெல்லி கேபிடல்ஸ்…
விசாகப்பட்டினம் : விசாகப்பட்டினத்தில் தற்போது நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல்…
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 சீசனின் 4வது போட்டி டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே…
விசாகப்பட்டினம் : ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பு டெல்லி அணியின் கேப்டனாக செயல்படுவார் என கணிக்கப்பட்ட கே.எல்.ராகுல், இன்றைய முதல் போட்டியில்…
சென்னை : தமிழில் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்ட 'டிராகன்' திரைப்படம், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத்திலும்…
விசாகப்பட்டினம் : ஐபிஎல் 2025 தொடரில் இன்று நடைபெறும் 4வது போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…