சமூக வலைதளங்களில் பரப்பப்படும் பொய் செய்திகள் எதிரொலி! மத்திய அரசுக்கு 3 வாரம் கெடு விதித்த உச்சநீதிமன்றம்!
சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்புவது தற்போது அதிகமாகி விட்டது. இதனை கட்டுப்பாடுத்த தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளன. அதாவது சமூக வலைதள கணக்குடன் அதனை உபயோகப்படுத்தும் பயனர்கள் தங்களது ஆதார் எண்ணை அதனுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகிறது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று கூறுகையில் சமூக வலைதளங்களில் தவறான செய்தி பரப்புவது தற்போது அதிகமாகி விட்டது உண்மைதான். அதனை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். என கூறியது. மேலும், மத்திய அரசானது இதற்கான வழிகாட்டுதலை அமைக்க வேண்டும். எனவும், இதனை பிரமாண பத்திரமாக தயார் செய்து உச்சநீதிமன்றத்தில் 3 வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும், கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த வழிகாட்டுதலில் மனித உரிமை மீறல் ஏதும் இருந்தால் அதனை அடுத்ததாக விசாரித்து கொள்ளலாம். முதலில் வழிகாட்டுதலை தயார் செய்துகொள்ள்ளுங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது