தூசிதட்டப்படும் எம்.எம்.ஏ வழக்குகள்.! உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு.!
எம்.எல்.ஏக்கள் , எம்.பிக்கள் மீதான நிலுவையில் உள்ள வழக்கு விசாரணை விவரங்களை உச்சநீதிமன்றத்தில், உயர்நீதிமன்றங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடுமையான குற்றங்கள் செய்தவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்பாய் பொதுநல வழக்கு தொடுத்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்த போது, நீதிபதி அமர்வு, இதுவரை 5 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள எம்.பி , எம்.எல்.ஏக்கள் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் பற்றிய விவரங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவானது அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இன்னும் 4 வார காலத்திற்குள் இந்த வழக்கு விவரங்களை உச்சநீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.