Categories: இந்தியா

நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் மறுதேர்தல்.. தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்!

Published by
பாலா கலியமூர்த்தி

NOTA votes: நோட்டா வாக்குகள் அதிகம் பதிவாகும் இடங்களில் அந்த தேர்தலை ரத்து செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு.

ஒரு நாட்டின் குடிமகன் வாக்களிப்பது என்பது ஒரு முக்கிய ஜனநாயக கடமையாகும். ஆனால் இதுவரை நடந்த தேர்தலில் 100 சதவீதம் வாக்குகள் பதிவானதாக சரித்திரம் இல்லை. இதனால் வாக்களிக்க தகுதியுடையவர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே அரசியல் கட்சியை சாராதவர்கள், அரசியல் மீதும் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் மீதும் நம்பிக்கை இல்லாதவர்கள், பிடிக்காதவர்கள் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று கூறும் வகையில் நோட்டாவுக்கு வாக்களிப்பது என்பது சமீப காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது.

யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற (None of the Above) NOTA என்பது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, கடந்த 2013ம் ஆண்டு முதல் முறையாக மின்னனு இயந்திரத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. அதிலிருந்து நோட்டாவுக்கு வாக்களிப்போர் எண்ணிக்கை அதிகரித்து தான் வருகிறது. இதில் குறிப்பாக சில இடங்களில் வேட்பளார்களை விட நோட்டாவுக்கு அதிகம் வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இந்த நிலையில் தற்போது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வரும் நிலையில், நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகும் இடங்களில் மறுதேர்தல் நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் எழுத்தாளரும், பேச்சாளருமான ஷிவ் கேரா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் எந்தவொரு வேட்பாளர்களை விடவும் நோட்டாவிற்கு அதிகபட்ச வாக்குகள் பதிவானால் அந்த தேர்தல் செல்லாது என அறிவிக்க வேண்டும். நோட்டாவை தேர்தலில் போட்டியிடும் ஒரு கற்பனை வேட்பாளராக விளம்பரம் செய்ய வேண்டும் என பல்வேறு விதிகளை கூறிய அவர், இதற்கான வழிகாட்டுதலை உருவாக்க தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது நீதிபதி கூறியதாவது, இந்த விவகாரம் தேர்தல் செயல்முறை பற்றியதாகவும். இதற்கு தேர்தல் ஆணையம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம் என தெரிவித்து, இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்க தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனிடையே, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கூறியதாவது, இந்த விவகாரம் ஒரு முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. சூரத்தில் நடந்ததை அனைவரும் பார்த்திருப்போம். அங்கு காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு, பிற வேட்பாளர்கள் வாபஸ் பெற்றதால் பாஜக வேட்பாளர் தேர்தல் இல்லாமலேயே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை சுட்டிக்காட்டி இருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ஐபிஎல் போட்டிகளை தவறவிடும் கே.எல்.ராகுல்! காரணம் என்ன?

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் சமீபத்தில் நடந்து முடிந்து அடுத்ததாக இந்த மாதம் இறுதியில் அதாவது வரும் மார்ச் 22-ஆம்…

52 minutes ago

“ஒன்றாக இணைந்து ஆட்சி”..அதிமுக அணிகள் இணைப்பு பற்றிய கேள்விக்கு சசிகலா சொன்ன பதில்?

சென்னை : அதிமுக கட்சியில் கடந்த சில ஆண்டுகளாகவே குழப்பங்கள் நடந்து வருகிறது. முன்னாள் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா, கட்சியின்…

52 minutes ago

எக்ஸ் வலைதளத்தில் சைபர் தாக்குதல்! “ஒரே நாடே இருக்கலாம்”? குண்டை தூக்கிப்போட்ட எலான் மஸ்க்!

சான் பிராசிஸ்கோ : உலகளவில் பெரிய சமூக வலைத்தளங்களில் ஒன்றாக வளர்ந்து நிற்கும் எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இரவு திடிரென முடங்கியது.…

2 hours ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட்!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

2 hours ago

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

11 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

12 hours ago