உச்சநீதிமன்ற நீதிபதிகள் செல்லமேஸ்வர், குரியன் ஜோசப், மதன் பி லோகூர், ரஞ்சன் கோகாய் ஆகியோர் முதன்முறையாக இன்னும் சற்று நேரத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் சற்று நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர் .இதுவரை இல்லாத நிகழ்வாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றுபவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
இந்நிலையில் வரலாற்றிலேயே முதல் முறையாக பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
நீதியரசர்கள் ரஞ்சன் கோகாய், குரியன் ஜோசப், செல்லமேஸ்வர், மதன் லோக்கூர் செய்தியாளர் சந்திப்பில் கூறியது …
உச்ச நீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் கூறுகையில்,இந்த செய்தியாளர் சந்திப்பு ஒரு வழக்கத்திற்கு மாறான நிகழ்ச்சி ஆகும் .தற்போது செய்தியாளர்களை சந்திப்பதற்கு நாங்கள் மகிழ்ச்சியுடன் வரவில்லை.உச்சநீதிமன்றத்தில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சனை சரி செய்யப்படவில்லை என்றால் ஜனநாயகத்தை காக்க முடியாது என்று கருதுகிறோம்.
கடந்த 2 மாதங்களாக உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரச்சனை நிகழ்ந்து கொண்டிருக்கிறது.உச்சநீதிமன்றத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையில் அரசியல் இருப்பதாக கூறுவதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை.உச்சநீதிமன்றத்தின் நிர்வாகம் தற்போது முறையானதாக இல்லை எனவும் கூறினார் .செய்தியாளர்களை சந்தித்து பேசும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம்.சில நாட்களுக்கு முன்னர் நாங்கள் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதினோம்.
அதில் சில விஷயங்கள் முறைப்படி நடைபெற வேண்டும் என்று தலைமை நீதிபதியிடம் எடுத்துரைத்தோம்.ஆனால் அதில் எந்த வேறு வழியும் கிடைக்காததால் தான் மக்கள் மத்தியில் பேச வேண்டும் என்று முடிவெடுத்தோம்.
அதில் சில விஷயங்கள் முறைப்படி தான் நடைபெற வேண்டும் என்று நாங்கள் கூறுவதை தலைமை நீதிபதி ஏற்க மறுக்கிறார்.
நீதியரசர் ரஞ்சன் கோகாய் கூறியது , சில விஷயங்களுக்கு தலைமை நீதிபதி தீர்வு காண வேண்டும் என்று விரும்புகிறோம்.ஆனால் நாங்கள் நான்கு பேரும் மட்டுமே இந்த விவகாரம் குறித்து விவாதித்து தற்போது பேசி வருகிறோம்.இந்த விவகாரம் குறித்து வேறு யாரிடமும் நாங்கள் விவாதிக்கவில்லை.நீதித்துறை சுயாட்சி அதிகாரத்துடன் செயல்பட வேண்டியது அவசியம்.
மேலும் வழக்குகள் ஒதுக்கும் நடைமுறையில் ஏற்பட்டுள்ள முறையற்ற தன்மையை நாங்கள் தலைமை நீதிபதியிடம் எடுத்துரைத்தோம் என்று ரஞ்சன் கூறினார்.
நீதியரசர் செல்லமேஸ்வர் கூறியது, உச்சநீதிமன்ற நடைமுறைகளை பாதுகாக்க நாங்கள் மேற்கொண்ட முயற்சி தோல்வி அடைந்துவிட்டது.இந்த பிரச்சனையில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் முடிவு செய்து கொள்ளட்டும் என்று அவர் கூறினார்…
#JChelameswar, #RanjanGogoi, #MadanLokur #KurianJoseph
#SupremeCourt #Judges #Chelameswar #Delhi
source: dinasuvadu.com
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…