ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெறுப்புணர்வை தூண்டும் மற்றும் ஆபாசக் கருத்துக்களை நீக்கவும் இவைகள் இடம்பெறாத வகையில் வழிமுறைகளை உருவாக்க கோரி பாஜகவை சார்ந்த ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் இந்த மனு மீது மத்திய அரசு மற்றும் டுவிட்டர் நிறுவனத்திற்கு பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதற்கு முன், மத்திய அரசு ட்விட்டர் நிறுவனததிற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு எதிராக ஆத்திரமூட்டும் ட்வீட்டுகளை வெளியிடும் கணக்குகளை நீக்கு நீக்க மத்திய அரசு ட்விட்டருக்கு அறிவுறுத்தியது.
இதைத்தொடர்ந்து, ட்விட்டர் அரசின் வேண்டுகோளின் பேரில் 250 பேரின் ட்விட்டர் கணக்குகள் தற்காலிகமாக நீக்கியது. ஆனால், சிறிது நேரத்தில் அந்த கணக்குகளை ட்விட்டர் மீண்டும் செயல்பட அனுமதித்தது. இதனால், அரசாங்க உத்தரவை பின்பற்றவில்லை என ட்விட்டருக்கு அரசு நோட்டீஸ் அனுப்பியது.
அரசாங்கத்தின் வழிகாட்டுதலுக்குக் கீழ்ப்படிய வேண்டிய கட்டாயம். அரசின் உத்தரவை பின்பற்ற மறுத்தால் சட்டரீதியான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என எச்சரிக்கை விடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று, ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைத்தார். இது இந்தியாவின்…
சென்னை : கடந்த 2-3 சீசன்களாக தோனியின் முழங்கால் பிரச்சினைகள், அவர் தொடர்ந்து பேட்டிங்கிற்கு தாமதமாக வருவது மற்றும் அவரது…
கொச்சி : கேரளாவின் பெரும்பாவூரில் ஒரு தனியார் நிறுவன ஊழியர் தரையில் வைக்கப்பட்ட கிண்ணத்தில் இருந்து விலங்குகளைப் போல தண்ணீர்…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு நடுவே…
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…