விவசாயிகள் 21 வது நாளாக போராட்டம் – மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ்

Published by
Venu

டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த வழக்கில் , மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.

டெல்லியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி தொடர்ந்து 20 நாட்களுக்கு மேல் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுடன் 5 கட்டங்களாக பேச்சுவார்த்தை நடத்தியும், பலன் ஏதும் கிட்டவில்லை. இதனால் பல்வேறு இடங்களில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

இதனிடையே டெல்லி எல்லையில் உள்ள விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி வழக்கு தொடரப்பட்டது.இந்த  வழக்கில் ,அதிக அளவில் கூட்டம் கூடுவதால் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது என்றும் விசாயிகள் சாலைகளை மறித்து போராட்டத்தில் ஈடுபடுவதால்  ஆம்புலன்ஸ் உள்ளிட்டவற்றிக்கு இடையூறு விளைவிப்பதாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்பொழுது, விவசாயிகள் எதிர் கொண்டு வரும் பிரச்சனைகளை தீர்க்க தேசிய அளவில் குழு அமைக்க வேண்டும் என்றும் இதனை பேச்சுவார்த்தை மூலமாக தீர்க்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.இந்த வழக்கில் விவசாய சங்கங்கள் எதிர்மனுதாரர்களாக இணைய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.மேலும் இந்த வழக்கில் , மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பி உத்தரவு பிறப்பித்தது நீதிமன்றம்.மத்திய அரசுடன் ஹரியானா, உத்தரப்பிரதேசம், டெல்லி மற்றும் பஞ்சாப் ஆகிய மாநில அரசுகளும் பதில் அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

Published by
Venu

Recent Posts

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் அலர்ட்!

தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட இந்த மாவட்டங்களில் இன்று மழை வெளுத்து வாங்கும்! வானிலை மையம் அலர்ட்!

சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய வடகிழக்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல்…

3 minutes ago

17 சுரங்கபாதைகள்., நெருங்கிய பாதுகாப்பு படை! பாக். ரயில் கடத்தலின் தற்போதைய நிலை…

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…

9 hours ago

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு எப்போது? என்னென்ன பாதுகாப்பு வசதிகள்?

சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…

10 hours ago

வெறிநாய் கடியால் பறிபோன உயிர்? கோவையில் தற்கொலை செய்துகொண்ட வடமாநில தொழிலாளி!

கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…

11 hours ago

எக்ஸ் சைபர் அட்டாக் : “செஞ்சது இவங்க தான்?” உக்ரைனை சுட்டி காட்டிய மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…

11 hours ago

400க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரயில் ஹைஜேக்… பாகிஸ்தானில் உச்சக்கட்ட பதற்றம்.!

பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…

12 hours ago